வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (11/04/2018)

கடைசி தொடர்பு:08:14 (11/04/2018)

`புதிய உத்திகளால் தீவிரவாதிகள் சவால் விடுக்கின்றனர்' - ராஜ்நாத் சிங் கவலை!

புதிய  உத்திகளைக்கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது சவாலாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

ராஜ்நாத் சிங்

தெலுங்கானாவில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புப் படையினருக்கான புதிய மையத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்துவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ``வாகனங்களை வைத்து மோதுதல், ஒற்றை ஆளாக கூட்டத்தில் புகுந்து மக்கள்மீது தாக்குதல் நடத்துவது என தீவிரவாதிகள் புதுப்புது உத்திகளைக் கையாண்டுவருகின்றனர். உலகெங்கிலும், கொடுஞ்செயல்கள்மூலம் தீவிரவாதிகள் உயிர்ச்சேதத்தை விளைவித்துவருகின்றனர். 

இந்த மாதிரியான கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு தீவிரவாதிகள் எளிதில் தங்களை மாற்றிக்கொள்கின்றனர். இது உலக நாடுகளுக்கு கடுமையான சவாலாக விளங்குகிறது. அவர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினர் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய பாதுகாப்பு சவால்களை சமாளிக்கும் வகையில், தேசிய பாதுகாப்புப் படையினருக்கு அளிக்கவேண்டிய திட்டங்கள்குறித்து மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க