Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`எங்களை யாராலும் தடுக்க முடியாது' - பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணிக்கு அச்சாரமிடும் முலாயம் சிங்!

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி தொடரும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங்

உத்தரப்பிரதேசத்தில், சமீபத்தில் நடந்துமுடிந்த கோரக்பூர், பூல்புர் ஆகிய இரு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி, முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தது. உத்தரப்பிரதேசத்தில் பரம வைரிகளாக இருந்த இவர்களின் திடீர் கூட்டணியால், ஆளும் பா.ஜ.க வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் தோல்வியுற்றனர். இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியிலேயே பா.ஜ.க தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே, தொடர்ந்து பா.ஜ.க-வுக்கு எதிராகக் கைகோத்து செயல்பட பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் முடிவெடுத்துள்ளது. இதனால், பா.ஜ.க-வுக்கு மேலும் சிக்கல் எழுந்துள்ளது. 

இந்நிலையில், மயின்பூரியில் நடந்த சமாஜ்வாதி கட்சிப் பொதுக்கூட்டத்தில் நேற்று, முலாயம்சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது,  `` நடந்துமுடிந்த இரு லோக்சபா இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றது. எங்கள் கட்சி வேட்பாளரை வெற்றிபெறவைத்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி. இரு கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி அமைத்தால் அந்தக் கூட்டணி வலுப்பெறும். அதற்கான தேவையும் உள்ளது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும். அதை யாராலும் தடுக்க முடியாது'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement