வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி41 ராக்கெட்..!

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 செயற்கைகோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி-சி41 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 

பி.எஸ்.எல்.வி-சி41 ராக்கெட்

பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் வான்வெளி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உதவும் வகையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ  வடிவமைத்தது. இது ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துக்கு இணையான நாவிக் எனப்படும் தொழில்நுட்பத்தைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளின் மொத்த எடை 1,425 கிலோ ஆகும். இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகள். இதனை பி.எஸ்.எல்.வி-சி41 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ தீர்மானித்த இஸ்ரோ அதற்கான கவுன்ட்  டவுனை நேற்றிரவு தொடங்கியது. அந்தவகையில் இன்று அதிகாலை 4.04 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் 43-வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் இதுவாகும்.

முன்னதாக 2013-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி சி-22 ராக்கெட் மூலம் 1ஏ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டிருந்த அணுசக்தி கடிகாரம் பழுதானதால் படங்கள் மற்றும் தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எச் செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதில், வெப்ப தகடுகள் சரியாக வேலை செய்யாததால் செயற்கைகோள் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!