கன மழையால் இடிந்துவிழுந்த தாஜ்மஹாலின் கலசம்!

மதுராவில் பெய்துவரும் கன மழை காரணமாக, தாஜ்மஹால் வளாக தூணின் கலசம் இடிந்துவிழுந்துள்ளது.

தாஜ்மஹால்

நேற்று முதல் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது. மணிக்கு 130 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.

பலத்த மழை காரணமாக, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் தூண் இடிந்துவிழுந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி இரவு பெய்த கன மழையால், தாஜ்மஹாலின் தெற்கு நுழைவு வாயிலில் உள்ள உலோகத் தூணின் கலசம் திடீரென இடிந்துவிழுந்தது. இந்தத் தூண், சுமார் 12 மீட்டர் உயரமுடையது. இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுராவில் பெய்த கனமழையால், வீடுகள் இடிந்து இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். அங்குள்ள விவசாய நிலங்களும் அதிகமாகச் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்துவருவதால், அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!