வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (12/04/2018)

கடைசி தொடர்பு:16:52 (12/04/2018)

காமன்வெல்த் 2018 - ஹாட்ரிக் சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் #CWG2018

காமன்வெல்த் போட்டியில் 76 கிலோ பிரிவுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் சுசில் குமார் தங்கம் வென்றார். 

சுஷில் குமார்
 

வழக்கம்போல் இன்றைய காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் அபாரம் காட்டினர். மகளிருக்கான 53 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை பபிதா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் ராகுல் அவாரே தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரர் சுஷில் குமார் 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவில் தங்கம் வென்றார். இது காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் சுஷில் குமார் தொடர்ச்சியாக வெல்லும் மூன்றாவது பதக்கமாகும். இதன்மூலம் சுஷில் குமார் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். 

 21 வது காமன்வெல்த் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளுடன் ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்தக் காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா, வெள்ளிப் பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலைத் தொடங்கியது. தற்போது 14 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 150 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் 82 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க