வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (12/04/2018)

கடைசி தொடர்பு:17:04 (12/04/2018)

சென்செக்ஸ், நிஃப்ட்டி தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னேற்றம் 

சென்செக்ஸ், நிஃப்ட்டி தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னேற்றம் 

இந்தியப் பங்குச்சந்தையில் இன்று முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸும் நிஃப்ட்டியும் தொடர்ந்து ஆறாவது நாளாக லாபத்தில் முடிவடைந்தன.

அமெரிக்க, ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில், சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் ஏற்பட்டிருக்கும் கவலை, அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வின் மார்ச் மாத மீட்டிங்கின் மினிட்ஸில் காணப்படும் வட்டி விகித உயர்வு பற்றிய குறிப்புகள் மற்றும் இந்நாடுகளிலிருந்து வெளியாகியிருக்கும் திருப்திகரமாக இல்லாத சமீபத்திய பொருளாதார அறிக்கைகள் காரணமாக தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியச் சந்தைகள் முன்னேற்றம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 160.69 புள்ளிகள் அதாவது 0.47 சதவிகிதம் முன்னேறி 34,101.13 என முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்ட்டி 41.50 புள்ளிகள், அதாவது 0.40 சதவிகிதம் உயர்ந்து 10,458.65-ல் முடிவுற்றது.

இதற்கு முக்கியக் காரணம் இன்று தகவல் தொழில் நுட்பப் பங்குகள் நன்கு முன்னேறியதுதான். இன்று BSE IT குறியீடு 3.18 சதவிகிதம் உயர்ந்தது. தேசியப் பங்குச்சந்தையில் Nifty IT 3.21 சதவிகிதம் உயர்ந்தது.

இத்துறையின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோஸிஸ் நாளை தன்னுடைய கடந்த வருத்தத்தை நான்காம் காலாண்டுக்கான நிதி அறிக்கையையும், தற்போதைய ஆண்டுக்கான வருமான எதிர்பார்ப்பு பற்றிய கணிப்பையும் வெளியிடுகிறது.

நேற்று அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ஐந்து மாதத்திய லோ ஆனா  65.31 ஆக சரிந்தது தகவல் தொழில் நுட்பத்துறை பங்குகள் விலையேறியதற்கு முக்கியக் கண்களில் ஒன்றாகும்.

டெலிகாம், ரியல் எஸ்டேட், மருத்துவம் மற்றும் மெட்டல் துறை பங்குகள் பெரும்பாலும் இறக்கத்திலேயே முடிவடைந்தன. வங்கி, எப்.எம்.சி.ஜி, ஆயில், பவர் மற்றும் கேப்பிடல் கூட்ஸ் துறை சார்ந்த சில பங்குகள் கவனத்தை ஈர்த்தன.


இன்று விலை அதிகரித்த பங்குகள் :

எச்.சி. எல். டெக்னாலஜிஸ் 4.1%
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 4%
இன்ஃபோஸிஸ் 3.5%
டெக் மஹிந்திரா 3%
ஆரக்கிள் சாஃப்ட்வேர் 2.5%
போஸ்ச் 1.8%
எம்.ஆர்.எப் 1.7%
ஆக்ஸிஸ் பேங்க் 1.7%
ஹாவேல்ஸ் இந்தியா 3%
பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் 2.3%

விலை இறங்கிய பங்குகள் :

வேதாந்தா 2.4%
லூப்பின் 2.1%
Dr ரெட்டிஸ் 1.9%
சன் பார்மா 1.5%
டாடா ஸ்டீல் 1.5%
அல்ட்ராடெக் சிமென்ட் 1.5%

இன்று மும்பைப் பங்குச்சந்தையில் 1139 பங்குகள் விலை உயர்ந்தும், 1524 பங்குகள் விலை குறைந்தும், 154 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.


டிரெண்டிங் @ விகடன்