`வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை' - புதிய சட்டம் கொண்டுவருகிறார் மெஹபூபா முஃப்தி!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.

'சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், மரண தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டுவரப்படும்' என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில், ஜனவரி 10-ம் தேதியன்று 8 வயது சிறுமியை ஒரு ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, நான்கு போலீஸ்காரர்கள், 18 வயதுக்குக் கீழ் உள்ள ஒரு சிறுவன் உள்ளிட்ட எட்டு ஆண்கள் சேர்ந்து கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்தனர். இந்தக் கொடுமையைக் கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

மெஹபூபா முஃப்தி

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்காக நீதிமன்றத்துக்குச் சென்ற காவல்துறையினரைத் தடுத்து, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஷபூபா முஃப்தி வெளியிட்ட அறிவிப்பில், ‘சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், மரண தண்டனை வழங்க, மாநில அரசு புதிய சட்டம் கொண்டுவரும்’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இனி ஒரு குழந்தைகூட இதுபோன்ற வன்கொடுமைக்கு ஆளாக அனுமதிக்க மாட்டேன். இந்தச் சிறுமியின் வழக்கில் நீதி கிடைக்க, நாட்டு மக்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் நிற்க வேண்டும். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!