Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உன்னாவோ பாலியல் வன்கொடுமை வழக்கு - பா.ஜ.க எம்.எல்.ஏ செங்கர் கைது..!

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவோ மாவட்டத்தில் உள்ள பாலியல் வன்கொடுமைக் குற்றம் சாட்டப்பட்ட பங்கரோ தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார். 

பா.ஜ.க எம்.எல்.ஏ

கடந்த ஞாயிறன்று, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்தின் முன்பு, 17 வயது சிறுமி தீக்குளிக்க முயன்றார். மாநிலத்தை ஆளும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவரான உன்னாவோ மாவட்டத்தின் பங்காரோ தொகுதி எம்.எல்.ஏ., செங்கர், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, அந்தச் சிறுமி தீக்குளிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, குற்றம் சாட்டிய பெண்ணின் வீட்டுக்குச் சென்ற எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள், பெண்ணின் தந்தையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல், எம்.எல்.ஏ-வின் தம்பி அனில்சிங் தலைமையில்தான்  நடந்துள்ளது. 

ஆனாலும், ஆயுத வழக்கில் பெண்ணின் தந்தை பப்புசிங், சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் திடீரென உயிரிழந்தார்.  இந்தச் சம்பவத்தால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசுகளுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்  பா.ஜ.க எம்.எல்.ஏ செங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பிரிவுகளின் கீழ் செங்கரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. விசாரணைக்குப் பின்னர் அவரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, சிறுமியின் தந்தை உயிரிழந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ-வின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement