தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! - 86 காயங்களுடன் மீட்கப்பட்ட 9 வயது சிறுமியின் உடல்

சூரத்தில், 86 காயங்களுடன், 9 வயது சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்துள்ளனர். 

பாலியல் வன்கொடுமை

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சூரத்தில் பெஸ்டன் பகுதியில் உள்ள ஒரு கிரிகெட் மைதானத்துக்கு அருகில், உடலில் 86 காயங்களுடன் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி, குறைந்தது 8 நாள்கள் பாலியல் வன்கொடுமை மூலம் சித்திரவதை செய்யப்பட்டு, நீண்ட நேரம் உயிருக்குப் போராடி பின் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இறந்த சிறுமி யார் என்பது இன்னும் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரின் குடும்பத்தை சேர்ந்த யாரும் சிறுமியின் உடலை வாங்கவும் முன் வரவில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போனதாக வந்த சிறுமிகளின் புகார்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என்பது பற்றிய விவரங்களும் இன்னும் தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து பேசிய சிவில் மருத்துவமனை தடயவியல் நிபுணர் கணேஷ் கோவகர், “ சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருந்தன. பெண்ணுறுப்பில் காயங்கள் இருந்தன. சிறுமிக்குப் போதை மருந்து அளிக்கப்பட்டிருந்ததா என்பதை தெளிவுபடுத்த சிறுமியின் சில ரத்த மாதிரிகளைச் சேகரித்து தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து காவல் துறை இன்ஸ்பெக்டர் பி.கே ஜலா கூறுகையில், “ சிறுமியின் உடல் கண்டெடுக்கபட்டு எட்டு நாள்கள் ஆகியும் இதுவரை குடும்பத்தினர் யாரும் தேடிவரவில்லை. சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு இங்கு வீசி சென்றுள்ளனர். இது தொடர்பாக பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகவும், சிறுமியின் குடும்பத்தினர் தொடர்பாகவும் யாரேனும் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு 20,000 ரூ சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்,” இவ்வாறு அவர் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!