காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை மீது கல்வீசி தாக்குதல்!

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வாரணாசியைச் சேர்ந்த வீராங்கனை பூனம்யாதவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பூனம் யாதவ்

ஆஸ்திரேலியாவில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்துள்ளனர். இதில் வாரணாசியைச் சேர்ந்த வீராங்கனை பூனம்யாதவ் பளுதூக்குதல், 69 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இவர் தனது போட்டியை முடித்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பிவிட்டார்.

இந்நிலையில் நேற்று வாரணாசியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரின் உறவினருக்கும் அருகிலுள்ள கிராம தலைவருக்கும் இடையே நீண்ட நாள்களாக இருந்த வந்த நில தகராற்றில் சமாதானம் செய்ய பூனம் முற்பட்டுள்ளார். அப்போது சிலர் இவரைக் கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். அதைத் தடுக்க வந்த பூனமின் அப்பா மற்றும் மாமா-வையும் தாக்கியுள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் பூனம். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அவரை மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து பேசிய காவல் துறை கண்காளிப்பாளர் அமித் குமார், “ பூனம்யாதவ் தான் தாக்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் தெரிவித்தார், அவர் கூறிய உடனேயே காவலர் படையுடன் நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை மீட்டோம். தாக்குதலுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகள் தப்ப முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!