வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்த காங்கிரஸ்..! சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா போட்டி

கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையாக தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அவருடைய ஆட்சிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், மே-12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ், பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். பா.ஜ.க முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்கிறது.

ஏற்கெனவே பா.ஜ.க முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த நிலையில், மொத்தமுள்ள 225 தொகுதிகளில், காங்கிரஸ் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் யாதீந்ரா, வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். சிகாரிபூரா தொகுதியில் எடியூரப்பா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!