``நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம்” - சிறுமிக்காக வாதாடும் வழக்கறிஞர் அச்சம்!

காஷ்மீர் மாநிலம் கத்துவா என்னும் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பைக்  கிளப்பியது. அதனை விட, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த நிகழ்வுகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

காஷ்மீர் மாநிலம் கத்துவா என்னும் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பைக்  கிளப்பியது. அதனைவிட, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த நிகழ்வுகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கறிஞர்கள் மீதும் புகார் எழுந்தது. 

தீபிகா சிங்

இந்நிலையில்,  கொலை செய்யப்பட்ட சிறுமி தரப்பில் வழக்கறிஞர்  தீபிகா சிங் ராஜாவாட் என்பவர் ஆஜராக உள்ளார் . இந்த வழக்கில் தான் ஆஜராவதைப்  பலர் விரும்பவில்லை என்றும் ஜம்மு -காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பூபிந்தர்சிங் சலாதியா நான் ஆஜராவதைத் தடுக்க முயன்று வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார். 

இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார் . அப்போது, ``இந்த வழக்கை எடுத்தப் பின்னர் எனக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது . என்னை இந்து மதத்துக்கு எதிரானவள் என்று புறக்கணிக்கிறார்கள். ஒதுக்குகிறார்கள். நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் அல்லது இந்த வழக்கில் என்னை ஆஜராகாமல் தடுக்கலாம். அவர்கள் என்ன செய்வார்கள் என்றே தெரியாது.  எனது பாதுகாப்புக்காக நான் உச்ச நீதிமன்றம் செல்வேன். எனது அவல நிலையை உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனாலும் நான்  நீதியின் பக்கம் நிற்பேன். 8 வயது சிறுமிக்கு நீதி கிடைக்கப் போராடுவேன்” என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!