காஷ்மீர் சிறுமி கொலை வழக்கு..! இன்று விசாரணை தொடங்குகிறது

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காஷ்மீர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை, இன்று தொடங்குகிறது.

ஜம்மு - காஷ்மீர் பகுதியின் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, எட்டு பேர் கொண்ட கும்பலால் ஜனவரி மாதம் மயக்கமருந்து கொடுத்து தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவாக அந்தப் பகுதியில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்த இந்த வழக்கில், நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிறுமி தரப்புக்காக ஆஜராவதாக அறிவித்ததிலிருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன என்று வழக்கறிஞர் தீபக் சிங் ராஜ்வாட்  தெரிவித்துள்ளார். இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியில், அந்த வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது.

கத்துவா மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் வழக்கு தொடங்குகிறது. இந்த வழக்கில் 8 பேர் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களில், ஒருவர் சிறார் என்பதால் தனி அமர்வு அமைக்கப்பட்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!