`என் உயிரைக் கொடுத்து காப்பேன்!’- மகளுக்காக உருகும் சன்னி லியோன்

`குழந்தைகளுக்கு எதிரான அனைத்துத் தீய மனிதர்களிடம் இருந்தும் உன்னைப் பாதுகாப்பேன்’ என்று சன்னி லியோன் பகிர்ந்துள்ள புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

சன்னி லியோன்
 

பாலிவுட் நடிகை சன்னி லியோன் - டேனியல் வெபர் தம்பதி, கடந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்தனர். மேலும், வாடகைத் தாய் மூலம் கடந்த மார்ச் மாதம் இரு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாகச் சன்னி லியோனும் அவரது கணவரும் அறிவித்தனர். குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என்று பெயர் சூட்டினர்.  `திருமண வாழ்க்கையில் குறுகிய காலத்திலேயே மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகிவிட்டோம்’ என்று மகிழ்ச்சியாகப் புகைப்படங்களை பகிர்ந்தார் சன்னிலியோன்.

சன்னி லியோன்
 

இந்நிலையில், அண்மையில் இந்தியாவை உலுக்கிய கத்துவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் மனம் உடைந்த சன்னி லியோன் தன் செல்ல மகளை அனைத்துத் தீய மனிதர்களிடமிருந்து பாதுகாப்பேன் என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். தன் மகளை அரவணைத்தபடி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சன்னி லியோன்  `என் உடல், உயிர், ஆவி என அனைத்தின் மீதும் நான் உனக்குச் சத்தியம் செய்து தருகிறேன்... இந்த உலகில் உள்ள அனைத்துத் தீய மனிதர்களிடம் இருந்தும் உன்னைப் பாதுகாப்பேன் என்று. உனது பாதுகாப்புக்காக என் உயிரையும் கொடுப்பேன். குழந்தைகளைக் கொடூர மனிதர்களிடம் இருந்து பாதுகாக்கும் நேரம் இது. உங்க குழந்தைகளை உங்க அரவணைப்பில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!