வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (16/04/2018)

கடைசி தொடர்பு:10:27 (16/04/2018)

வாய்க்காலில் தூக்கி வீசப்பட்ட 9 வயது சிறுமியின் உடல்!

ஹரியானாவில் 9 வயது சிறுமியின் உடல் வாய்க்காலுக்கு அருகில் இருந்த ஒரு பையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

வட மாநிலங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது போன்ற சம்பவங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இன்றும் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் திடௌலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் மிதந்தபடி ஒரு பை கிடந்துள்ளது. அதில் யாரோ ஒருவரின் கை,கால் இருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அந்தப் பையை எடுத்து சோதனை நடத்தினர். அதில் 9 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் உடனடியாக உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்துப் பேசிய போலீஸார், ``சிறுமியின் உடலைப் பார்க்கும்போது ஒரு வாரத்துக்கு முன்பிலிருந்தே இங்குக் கிடப்பதாகத் தெரிகிறது. அவர் எப்படி இறந்தார் என்பது பிரேதப் பரிசோதனையின் முடிவில்தான் தெரியவரும். சிறுமியைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஒரு குழு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.