19,000 சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்..! ராகுல் காந்தி வேதனை

2016-ம் ஆண்டில் மட்டும் 19,675 சிறார்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்கள் அவமானமானது என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உன்னோவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவங்களுக்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், `2016-ம் ஆண்டில் மட்டும் 19,675 சிறார்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவமானகரமானது. நம் மகள்களுக்கு நீதி கிடைக்கும் என்று மோடி உண்மையிலேயே தெரிவித்திருந்தால், பிரதமர் இந்த விவகாரத்தின்மீது தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகளை உடனடியாகத் தண்டிக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!