வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (17/04/2018)

கடைசி தொடர்பு:08:08 (17/04/2018)

``சட்டம் இயற்றுவதுதான் என் வேலை” மாணவிக்கு விநோத பதில் தந்த ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது சொந்தத் தொகுதியான அமேதியில், நேற்று அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றார். அப்போது, அங்கு செயல்பட்டுவரும் அரசுப் பள்ளிக்கும் சென்றார். 

ராகுல் காந்தி

Photo: ANI Twitter

அப்போது அரசுப்  பள்ளி மாணவிகள், ராகுல் காந்தியிடம் சில கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் விநோதமாக இருந்தது. மாணவி ஒருவர், ``அரசாங்கம் பல சட்டங்களைக் கொண்டுவருகிறது. ஆனால், கிராமங்களில் அவை முறையாக வந்து சேரவில்லையே?” எனக்  கேட்டார். அதற்குச் சிரித்தபடியே பதிலளித்த ராகுல் காந்தி, ``இந்தக்  கேள்வியை பிரதமர் மோடியிடம் கேளுங்கள். இப்போது இருப்பது எனது அரசாங்கம் இல்லை. எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது, இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கலாம்” என்றார்.  

அதற்கு அந்த மாணவி, அமேதி தொகுதியின் வளர்ச்சிகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, `அமேதியை யோகி ஆதித்யநாத் தான் ஆள்கிறார். நான் அமேதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி மட்டுமே. எனது பணி மக்களவையில் சட்டங்கள் இயற்றுவதுதான். உத்தரப்பிரதேசத்தை ஆட்சிசெய்வது யோகி ஆதித்தியநாத். ஆனால், அவர் வேறு வேலைகளைச் செய்கிறார். மின்சாரம், குடிநீர், கல்வி என எதிலும் அவர் கவனம் செலுத்தவில்லை” எனப் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். 

எம்.பி என்பவருக்கு நாடாளுமன்றம் தாண்டி தொகுதிப் பணிகளும் உள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வரை தொகுதியின் வளர்ச்சிக்குச் செலவு செய்யமுடியும். அதேபோன்று, அரசு செயல்படுத்தும் சட்டமும் திட்டங்களும் தொகுதியில் இருக்கும் கடைசி கிராமம் வரை சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்யும் பொறுப்பும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உள்ளது. தொகுதி வளர்ச்சிகுறித்த கேள்விக்கு, 'சட்டம் இயற்றுவதுதான் என் வேலை' என ராகுல் சொன்ன பதிலை அங்கிருந்தவர்களே எதிர்பார்க்கவில்லை. 

மூன்று நாள் பயணமாக ராகுல் காந்தி அமேதி வந்தார். அவர், அடுத்த நாள்களில் அவரது தாயார் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதிக்கும் செல்ல உள்ளார்.  

#WATCH: Rahul Gandhi interacts with school students in Amethi, on being asked about law implementation in villages, says. 'Ye aap Modi ji se puchiye', on being asked about Amethi, says, 'Amethi ko toh Yogi ji chalate hain.' pic.twitter.com/jmi8T6xO2G