`ரூ.2,000 நோட்டுகள் எங்கே செல்கின்றன?’ கேள்வி கேட்கும் மத்தியப் பிரதேச முதல்வர்

சந்தையில் ரூ.2,000 நோட்டுகள் மாயமாவதுக்குப் பின்னால் ஏதோ சதி உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

சிவ்ராஜ் சிங் சௌகான்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜாபூர் என்ற இடத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பேசிய அந்த மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான், சந்தையில் ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இதற்குப் பின்னால் ஏதோ சதி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு 15,00,000 கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. ஆனால் அதன் பிறகு 16,50,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இருப்பினும் சந்தையில் ரூ.2,000 நோட்டுகளைக் காண முடிவதில்லை. அனைத்து நோட்டுகளும் எங்கே செல்கிறது. அவற்றைப் புழக்கத்துக்கு வரவிடாமல் யாரோ பதுக்கிவைத்துள்ளனர். இதுவே பண பற்றாக்குறைக்குக் காரணம். இந்த விஷயத்தில் அரசு கடுமையாகச் செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, டெல்லி போன்ற மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!