சர்ச்சை சாமியார் சாக்ஷி மகராஜ் நைட் கிளப்பை திறந்துவைத்த காமெடி கதை!

சர்ச்சை சாமியார் சாக் ஷி மகராஜ் நைட் கிளப்பை திறந்து வைத்துள்ளார்.

சர்ச்சை சாமியார் சாக்ஷி மகராஜ் நைட் கிளப்பை திறந்துவைத்த காமெடி கதை!

ழக்கமாக, கோயில் விழாக்களில் சாமியார்கள் பங்கேற்பார்கள். சாமியார் சாக்ஷி மகராஜ் சற்று வித்தியாசமாக நைட் கிளப் ஒன்றைத் திறந்துவைத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உன்னாவோ தொகுதி எம்.பி-யான  இவர்,  சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர். லக்னோவில் 'லெட்ஸ்மீட்' என்ற நைட் கிளப்பை ரிப்பன் வெட்டி அவர்  திறந்துவைக்க, பின்னர் அதுவும் சர்ச்சையில் முடிந்தது. இந்த நைட் கிளப்பை மகராஜ் திறந்துவைத்ததும் காமெடி ரகம்தான்.  பாரதிய ஜனதா கட்சி  முன்னாள் எம்.எல்.ஏ., ரஞ்சன் சிங்கின் மருமகனுக்கு  இந்த நைட் கிளப் சொந்தமானது. 

 MP Sakshi Maharaj

லக்னோவுக்கு வேறு  விஷயமாகச்  சென்ற மகராஜ், அவசர அவசரமாக டெல்லிக்கு ஃப்ளைட் பிடிக்க ஓடியிருக்கிறார். இந்தச் சமயத்தில் அவரை அணுகிய ரஞ்சன் சிங், சாக்ஷி மகராஜை போகிறபோக்கில் ரெஸ்டாரன்ட்தான் திறந்துவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.  சாக்ஷி மகராஜும், 'ஆகட்டும் பக்தா' என்றிருக்கிறார். ரிப்பன் வெட்டி உள்ளே சென்ற பிறகே தெரிந்தது,  திறந்தது ரெஸ்டாரன்ட் இல்லை... நைட் கிளப் என்று. உள்ளே, மது வகைகள் நிறைந்த பார் அவரை வரவேற்க, அதிர்ந்துபோனார்.  

கோபமடைந்த  மகராஜ், உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் மகேந்திர நாத் பாண்டேவுடன் சென்று, ரஞ்சன் சிங் தன்னை ஏமாற்றி நைட் கிளப்பைத் திறக்கவைத்துவிட்டதாகப் புகார் அளித்தார். ரஞ்சன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420-ன் கீழ் ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  ''நான் எம்.பி மட்டுமல்ல, சாதுவும்கூட. ரெஸ்டாரன்ட் என்று கூறி ஏமாற்றிவிட்டனர்'' என்றார் சாக் ஷி மகராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!