`மகாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது” சொல்கிறார் திரிபுரா முதல்வர்!

``தொழில்நுட்பம் நமக்குப் புதிதல்ல. மகாபாரதம் காலத்திலேயே இணையதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது” என திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் தேப் கருத்து தெரிவித்தார். 

பிப்லாப் தேவ்

கடந்த மாதம் நடந்த திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இதையடுத்து, திரிபுராவின் முதல் பா.ஜ.க முதல்வராக பிப்லாப் குமார்  தேப் பதவியேற்றார். பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் நேற்று மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசினார் பிப்லாப் தேப். 

அப்போது அவர், “இணையதளத்தைக் கண்டுபிடித்தவர்கள் அமெரிக்கர்களோ அல்லது மற்ற நாடுகளோ அல்ல. பல லட்ச வருடங்களுக்கு முன்பே இணையதளம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதைப் பலர் மறுக்கலாம்; மகாபாரதத்தில் குருஷேத்திரம் போர்க்களத்தில் நடப்பவற்றை சஞ்ஜய் திரிதராஷ்ட்ரரிடம் தெரிவிப்பார். அது எப்படி முடியும். அந்தக் காலத்திலேயே நமது நாட்டில் இணையதளம், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் போன்றவை இருந்தது. தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கும் நாட்டில் பிறந்ததை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. இன்று, தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருப்பதாகத் தெரிவிக்கும் பல நாடுகள், இந்தியாவிலிருந்து பலரை பணிக்கு எடுக்கின்றனர்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!