இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

உலகச் சந்தைகள்

அமெரிக்க சந்தைக் குறியீடுகளான எஸ் & பி500 இண்டெக்ஸ் 2706.39 (+28.55) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 24,786.63 (+213.59) என்ற அளவிலும் செவ்வாயன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது.  தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,346.40 டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குரூடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 71.58 டாலர்  என்ற அளவிலும் இருந்தது.    

டாலரின் மதிப்பு ரூபாயில்

செவ்வாயன்று, அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில், ரூ.65.6124 என்ற அளவில் இருந்தது.

நிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்

இன்று நிப்டி எப்படி இருக்க வாய்ப்பு?

செவ்வாயன்று சிறியதொரு ஏற்றத்துடன் நிப்டி முடிவடைந்தது. சிறியதொரு இறக்கம் எந்த நேரத்திலும் வரக்கூடும் என்பதைப்போன்ற ஆரம்பநிலை டெக்னிக்கல் சூழல்கள் தெரிய ஆரம்பித்துள்ளது. அவ்வாறு ஒரு இறக்கம் அதிக அளவிலான வால்யூமுடன் வந்தால் அனைத்து விதமான டிரேடர்களும் வியாபாரத்தை மிகவும் குறைத்துக்கொள்வதே நல்லது எனலாம். செய்திகள் மற்றும் வெளிவர இருக்கும் காலாண்டு முடிவுகள் மற்றும் முடிவுகள்குறித்த எதிர்பார்ப்புகள் போன்றவையே சந்தையை எடுத்துச்செல்லும். ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடன் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டிய தருணமிது. கடைசி அரைமணி நேரத்திற்கு முன்னால், வியாபாரத்தை முடித்துக்கொள்வதே சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். கேப் ஓப்பனிங் வந்தால் நிதானியுங்கள். சந்தை செட்டிலான பின்னர் மட்டுமே டிரேடிங் செய்வதுகுறித்து பரிசீலியுங்கள். கவனத்துடன் செயல்படுங்கள்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்?

17-04-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை  என்று பார்த்தால் 4,559.84 கோடி ரூபாய்க்கு வாங்கியும்,  5,511.23 கோடி ரூபாய்  அளவுக்கு விற்றும், நிகர அளவாக 951.39 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.

உள்நாட்டு இன்ஸ்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள் (டிஐஐ) என்ன செய்தார்கள்?

17-04-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால்  3,232.34 கோடி ரூபாய்க்கு வாங்கியும், 2,508.53 கோடி ரூபாய்க்கு விற்றும், நிகர அளவாக 723.81 கோடி ரூபாய்க்கு  வாங்கியிருந்தனர்.

டெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே!

குறிப்பிட்ட சில பங்குகளில் 17-04-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம்: [A & B என்ற இரண்டு வகை அளவீட்டில் (Filter) : (A)  டெலிவரி அளவு: 10,00,000-க்கும் மேல் மற்றும் கடைசி டிரேடிங் நாளன்று விலை ஏற்றம் இருந்த பங்குகள்  (B) வியாபார அளவு 4,00,000-க்கும் மேல் மற்றும் நடந்த வியாபாரத்தில் இருந்த டெலிவரி, வியாபாரத்தின் அளவு  40 சதவிகிதத்துக்கும் மேலாக இருந்த பங்குகள்.




ஓப்பன் இன்ட்ரஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):

IDEA, POWERGRID, YESBANK, HINDALCO, NHPC, L&TFH, DLF, DCBBANK, BHEL, INFY, JISLJALEQS, SBIN, SOUTHBANK, TITAN.

ஓப்பன் இன்ட்ரஸ்ட் குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):
RCOM, GMRINFRA, SUZLON, INFIBEAM, TV18BRDCST, BHARTIARTL, JPASSOCIAT, SAIL, ASHOKLEY, ICICIBANK, AXISBANK, INDIACEM, FEDERALBNK.

உங்களுக்கு தெரியுமா - இந்த ஷேர்களில் 18-04-18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம் செய்யக் கூடாது என்பது!

எப்&ஓ வியாபாரத்தில், 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால், புதிய வியாபாரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:
IRB, JPASSOCIAT, RCOM, TV18BRDCST.

இன்றைய போர்டு மீட்டிங்குகள் 

இன்று  போர்டு மீட்டிங்  நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்):
CERA, ACC, HDFCLIFE, JISLJALEQS, MASTEK, MINDTREE
*****
பொறுப்பு கை துறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும்.  இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை.  இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல.  பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்த விதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்த வித நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html  எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கை துறப்பை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதத்தை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்:  INH200001384)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!