வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (18/04/2018)

கடைசி தொடர்பு:10:52 (18/04/2018)

கட்டுப்பாட்டை இழந்த லாரியால் பறிபோன 21 உயிர்! திருமணத்துக்கு சென்றபோது நடந்த சோகம்

மத்தியப்பிரதேசத்தில், மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

விபத்து

மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில், திருமணத்துக்குச் சென்றுவிட்டு  மினி லாரி ஒன்றில் சுமார் 50 பேர் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். லாரி, பாலத்தின்மீது சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராத விதமாக சோன் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 21 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. படுகாயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள்குறித்து மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் நேரில் ஆய்வுசெய்தார். மேலும், மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் கவுகான், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.