வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (19/04/2018)

கடைசி தொடர்பு:16:00 (19/04/2018)

உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் திடீர் முடக்கம்!

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

ஹேக்கர்ஸ்

உச்ச நீதிமன்றத்துக்கு என அதிகாரபூர்வ இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் மற்றும் அவற்றின் விவரங்கள் குறித்து பதிவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அந்த இளையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. அதன் முகப்பு பக்கத்தில் ஒரு இலை போன்ற படம் இருந்தது. மேலும், ஹைடெக் பிரேசில் ஹேக் டீம் என்ற வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தது. இதனால் பிரேசிலை சேர்ந்த ஹேக்கர்ஸ் குழு இந்த முடக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 

ஹேக் செய்யப்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு, இணையதளம் முற்றிலும் முடங்கியது. இதைச் சரிசெய்யும் முயற்சியில் தற்போது கணிப்பொறி வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று சில நாள்களுக்கு முன்னர், இந்திய பாதுகாப்புத்துறையின் அதிகாரபூர்வ இணையதளம் சீன ஹேக்கர்களால் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.