சந்தையில் பங்குகள் மீண்டும் முன்னேற்றம்  | Share market for the day at close 19042018

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (19/04/2018)

கடைசி தொடர்பு:17:30 (19/04/2018)

சந்தையில் பங்குகள் மீண்டும் முன்னேற்றம் 

ஒன்பது நாள்கள் தொடர் முன்னேற்றத்துக்குப் பின் புதன்கிழமையன்று இறங்குமுகத்தைக் கண்ட இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் பாசிட்டிவான முடிவைக் கண்டது. ஒரு பெரிய அளவிலான முன்னேற்றம் இல்லையென்றாலும், முதலீட்டாளர்களின் மனநிலை ஓரளவு உற்சாகமாகவே இருந்ததால் இன்று தொடக்கத்திலிருந்து முடிவு வரை சந்தை பாசிட்டிவ் சோனிலேயே இருந்தது.

சர்வதேச வர்த்தகம் பற்றிய கவலை சற்று குறைந்ததாலும், அமெரிக்க மற்றும் சில ஆசிய நாடுகளின் பொருளாதார அறிக்கைகள் சிறிது உற்சாகமூட்டக்கூடிய வகையில் இருந்ததாலும் இன்று சந்தையில் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காணப்பட்டது. கனிம பொருள்களின் விலை உயர்வு காரணமாக மெட்டல் துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன.

ரூபாயின் மதிப்பு குறைந்ததனால் தகவல் தொழில்நுட்ப பங்குகள் பெரும்பாலும் உயர்ந்தன.

கச்சா எண்ணெய் விலை கடந்த 2014 டிசம்பர் மாதத்தில் உயரத்தை எட்டியதால், இந்திய ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தாலும், ஆசிய பங்கு சந்தையில் இது ஒரு பாசிட்டிவான போக்குக்கு வழி வகுத்ததால், இங்கும் மற்ற துறை பங்குகள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை.

வெளிவரவிருக்கும் சில முக்கிய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் நன்றாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் பங்குகள் விலை உயரக் காரணமாக இருந்தது எனலாம்.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 95.61 புள்ளிகள். அதாவது 0.28 சதவிகிதம் உயர்ந்து 34,427/29 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 39.10 புள்ளிகள், அதாவது 0.37 சதவிகிதம் முன்னேறி 10,565.30-ல் முடிவுற்றது.

அந்நிய செலாவணி சந்தையில் இன்று டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஏழு மாத்திரை லோ ஆக 65.85 என சரிந்தது.

கச்சா எண்ணெய் (Brent Crude), பாரெல்லேக்கு 74.44 டாலர் என நவம்பர் 2014-க்குப் பிறகான ஓர் அதிகமான நிலையை இன்று எட்டியது, ரூபாயின் மதிப்புக் குறைய ஒரு முக்கிய காரணம்.

இன்று விலை உயர்ந்த பங்குகள் :

ஹிண்டால்கோ  8:8%
வேதாந்தா 6.6%
டாடா ஸ்டீல் 3.3%
யெஸ் பேங்க் 2.9%
பார்தி ஏர்டெல் 2.7%
அல்ட்ராடெக் சிமென்ட் 2.5%
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் 2.2%
கெயில் இந்தியா 2.2%
லார்சென் & டூப்ரோ 1.8%
Dr ரெட்டிஸ் 1.6%

விலை இறங்கிய பங்குகள் :

பாரத் பெட்ரோலியம் 7.1%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 5.6%
இந்தியன் ஆயில் கார்பொரேஷன் 3%
டைட்டன் 2.5%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1369 பங்குகள் விலை உயர்ந்தும், 1285 பங்குகள் விலை குறைந்தும், 163 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.