97 பேர் கொலை... முன்னாள் பா.ஜ.க அமைச்சர் விடுதலை..!

குஜராத் மாநிலத்தில் உள்ள நரோடா பாட்டியாவில் நடைபெற்ற கலவரத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், அம்மாநிலத்தின் முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோட்னானிக்கு விதிக்கப்பட்ட 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரத்து செய்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

97 பேர் கொலை... முன்னாள் பா.ஜ.க அமைச்சர் விடுதலை..!

குஜராத் மாநிலத்தில் உள்ள நரோடா பாட்டியாவில் நடைபெற்ற கலவரத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், அம்மாநிலத்தின் முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோட்னானிக்கு விதிக்கப்பட்ட 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரத்து செய்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மாயா கோட்னானி

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்கு அடுத்த நாள்,  நரோடா பாட்டியாவில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் நடத்திய இந்தப் போராட்த்தில் சுமார் 800 வீடுகளுக்கு மேல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக 82 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களில் ஒருவரான மாயா கோட்னானி என்பவரின் பெயரும் இடம்பெற்றது.

இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாயா கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. மேலும், மாயா கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனையும், பாபு பஜ்ரங்கி உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. இவர்களைத் தவிர மீதமுள்ள 7 பேருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 23 பேருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன. குஜராத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு தூண்டுதலாகவும், அதற்கு உதவி செய்ததாகவும் மாயா கோட்னானி குற்றம்சாட்டப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வழக்கு தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஹர்ஷ் தேவானி தலைமையிலான அமர்வு, இன்று (ஏப்ரல் 20) தீர்ப்பளித்தது. தீர்ப்பில், இந்த வழக்கு தொடர்பாக போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், அம்மாநிலத்தின் முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோட்னானிக்கு விதிக்கப்பட்ட 28 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அவரது உதவியாளர் உள்ளிட்ட 15 பேரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. அதேபோல், விஷ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.

வன்முறை, குண்டுவெடிப்பு, கொலை என்று பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் பிஜேபி மற்றும் இந்துத்வா அமைப்புகளைச் சேர்ந்த பலரும், கடந்த 2014- ம் ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வந்ததிலிருந்து விடுதலையாகிக் கொண்டே உள்ளனர். சொராபுதின் என்கவுன்டர் கொலை வழக்கிலிருந்து அமித் ஷா விடுதலை, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளில் அசீமானந்தா - பிரக்யா சிங் விடுதலை, குஜராத் காவல்துறை அதிகாரி வன்சாரா விடுதலை என்ற வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது, 97 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் உட்பட பலரும் விடுதலையாகியுள்ளனர்.

குஜராத் கலவரம்

இந்த விஷயங்களை வைத்து, மோடியின் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரபரக்கப்படுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!