வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (20/04/2018)

கடைசி தொடர்பு:21:00 (20/04/2018)

`தி ஹிட்டவாடா' பத்திரிகை ஆளுநர் குறித்து நாக்பூர் பத்திரிகையாளர் சங்கம் அறிக்கை!

ஆளுநர் நேர்மையானவர் என்று நாக்பூர் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

`தி ஹிட்டவாடா' பத்திரிகை ஆளுநர் குறித்து நாக்பூர் பத்திரிகையாளர் சங்கம் அறிக்கை!

ளுநர் பன்வாரிலால் புரோஹித் சர்ச்சைக்குரியவராகிவிட்டார். நிர்மலா தேவி விவகாரம், பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டியது என அடுத்தடுத்த சர்ச்சைகளால் தமிழகத்தில் விவாதப் பொருளானார் ஆளுநர். செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தானும் ஒரு பத்திரிகையாளர்தான் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டார். அப்படி குறிப்பிட்டதும் உண்மைதான். தமிழக ஆளுநரும் ஒரு பத்திரிகையாளர்தான். அதையும்  தாண்டி ஒரு பத்திரிகையின் 'எடிட்டர் இன் சீஃப்.'  கடந்த 1919-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி ஹிட்டவாடா . ( பீப்புள்ஸ் பேப்பர்).  100 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் பத்திரிகை பன்வாரிலால் புரோஹித்துக்குச் சொந்தமானது. 

ஆளுநருக்கு சொந்தமான ஹிட்டவாடா பத்திரிகை


மத்திய இந்தியாவில் பிரசித்திபெற்றது 'தி ஹிட்டவாடா' நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. நாக்பூர் நகரில் மட்டும் 1,30,000 பிரதிகள் விற்பனையாகின்றன. இது தவிர, ராய்பூர், ஜபல்பூர், போபால் போன்ற நகரங்களில் இருந்தும் தி ஹிட்டவாடா வெளி வருகிறது. தமிழகத்தில் ஆளுநர் மீது சர்ச்சைகளைத் திட்டமிட்டு உருவாக்குவதாக மராட்டிய மாநிலம் மற்றும் நாக்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சங்கங்கள் அறிக்கை விடுத்துள்ளன. அதில், ''மகாராஷ்ட்ரா மாநிலம் மற்றும் நாக்பூர் பத்திரிகையாளர்களால் பாபு ஜி என்று அழைக்கப்படும் பன்வாரிலால் புரோஹித்தைப் பல ஆண்டுக்காலமாக நாங்கள் அறிவோம். குறை கூற முடியாத அளவுக்கு நேர்மையானவர். தனி திறமை வாய்ந்த மக்கள் பிரதிநிதி. மத்திய இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் தி ஹிட்டவாடா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர். பல கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கிறார். பொது வாழ்க்கையில் எளிமையானவர். பத்திரிகையாளர்களின் குரலை அடக்க முனையும்போதெல்லாம் எதிர்த்து நின்றவர்.

நாக்பூர் பத்திரிகையாளர் சங்கத்தின் ஆளுநர் குறித்த அறிக்கை

தமிழக ஆளுநர் மீது அடிப்படையற்ற கெட்ட எண்ணத்தோடுகூடிய தவறான அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறி அவரின் கறைபடாத செல்வாக்கை பழித்துக் கூறும் வகையில் சில சக்திகள் எடுக்கும் முயற்சிகளுக்கு மகாராஷ்ட்ரா மாநில உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும் நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தி ஹிட்டவாடாவில் ஏராளமான பெண் பத்திரிகையாளர்கள் பணி புரிகின்றனர். மத்திய இந்தியாவில் அதிக பெண் பத்திரிகையாளர்கள் பணி புரியும் பத்திரிகையும் இதுதான். அவரின் நேர்மையான குண நலன்கள் காரணமாக அந்த நிறுவனங்கள் அனைத்துமே விதிமுறைகளைப் பின்பற்றி இயங்குகின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பானவை. மிகுந்த வேதனையுடனும் கவலையோடும் இதைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க