பி.ஜே.பி நிர்வாகிகளின் சர்ச்சை கருத்துகள்... உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

பி.ஜே.பி நிர்வாகிகளின் சர்ச்சை கருத்துகள்... உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

சர்ச்சை என்றாலே பி.ஜே.பி என்று சொல்லும் அளவுக்கு அந்தக் கட்சியின் நிர்வாகிகள் பலரும் தினந்தோறும் புதுப்புது விதமாகப் பேசுபொருளாக இருந்து வருகிறார்கள். சுப்பிரமணியன் சுவாமி தொடங்கி, ஹெச்.ராஜா என்று நீண்ட இந்தப் பட்டியலில் இப்போது எஸ்.வி.சேகர் சேர்ந்துள்ளார். இவர்கள் எதையாவது தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வதுடன் பி.ஜே.பி-யை மக்களிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். அண்மையில் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூகவலைதளத்தில் வெளியிட்ட கருத்து மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடி - பி ஜே பி

பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் நிலையில், பிரதமர் மோடி, ``எந்த விஷயத்தையும் முழுமையாக அறிந்துகொள்ளாமல் ஊடகங்கள் முன்பு நீங்கள் பேசுவது விமர்சனங்களை உண்டுபண்ணுகிறது. இதனால், பி.ஜே.பி மற்றும் ஆட்சியின் புகழுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. ஆர்வக்கோளாறில் கருத்துகள் தெரிவிப்பதைக் கட்சியினர் தவிர்க்க வேண்டும். ஊடகங்களில் பேசுவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமே கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!