தலையில் காயத்துடன் சிகிச்சைக்குச் சென்றவருக்கு காலில் ஆபரேஷன்! டெல்லி அரசு மருத்துவமனை அலட்சியம்

தலையில் சிறிய காயம் என மருத்துவமனைக்குச் சென்றவருக்கு, காலில் அபரேஷன் செய்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள சுஷ்ருதா ட்ரவுமா என்ற மருத்துவமனை, அம்மாநில அரசுக்குக் கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில், விஜேயேந்திர தியாகி என்ற நபர் விபத்து காரணமாக தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட சிறிய காயத்துக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில், வேறொரு நோயாளி காலில் அடிபட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். காலில் அடிபட்டவருக்குச் செய்யவேண்டிய அறுவை சிகிச்சையைத் தவறுதலாகத் தலையில் காயம் இருந்த விஜேந்திர தியாகிக்குச்  செய்துள்ளனர். இந்தச் சம்பவம், மற்ற நோயாளிகளையும் அவரின் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய விஜேந்திர தியாகியின் மகன், “ தலையில் காயம் என அனுமதிக்கப்பட்ட எனது தந்தைக்கு, காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரின் வலது காலில் துளை போட்டு, சிறிய ஊசியைப் பொருத்தியுள்ளனர். எனது தந்தைக்கு அனஸ்தீசியா கொடுக்கப்பட்டதால், என்ன நடந்தது என அவருக்குத் தெரியவில்லை. எனது தந்தைக்கு இன்னும் தலையில் வலி இருக்கிறது. இதனால், தற்போது அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தவறுதலாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டதைக் கண்டறிந்த அடுத்த சில மணி நேரத்தில், விஜேந்திர தியாகிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் மீதும், மருத்துவமனை மீதும் வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர், மேற்பார்வையில்லாமல் சிகிச்சை மேற்கொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகுறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!