``பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை!''- நிதி ஆயோக் தலைவர் | States Like Bihar, UP Keeping India Backward: NITI Aayog CEO says

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (25/04/2018)

கடைசி தொடர்பு:07:35 (25/04/2018)

``பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை!''- நிதி ஆயோக் தலைவர்

பீகார், உத்தரபிரதேச மாநிலங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளன.

``பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை!''- நிதி ஆயோக் தலைவர்

பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்தியாவை பின்னுன்னுத் தள்ளுவதாக நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைகிற வேளையில் இந்த மாநிலங்களால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

நிதி ஆயோக் தலைவர்

புது டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் அமிதாப் காந்த், ''எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.. ஆனால், சமூக காரணிகளில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு, உத்தரப்பிரதேசம், பீகார், சட்டிஷ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களே காரணம். உலக அளவில் human development index - 188 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 131-வது இடமே கிடைத்துள்ளது,

அதனால், மனித வள முன்னேற்றத்தில் நாம் அக்கறை காட்ட வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளோம். 5- ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 2-ம் வகுப்பு கணக்கு செய்யத் தெரியவில்லை. தாய் மொழியைப் படிக்கத் தெரியவில்லை. நாட்டில் குழந்தை இறப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. இதையெல்லாம் சரிசெய்தால்தான்  human development index - பட்டியலில் நாம் முன்னேற்றம் காண முடியும். முக்கிய முடிவுகளை பெண்கள் எடுக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பும் முக்கியம் '' என்று பேசினார்.

உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் மக்கள் தொகை அதிகம். அதோடு, கொலை, கொள்ளை , பாலியல் வன்கொடுமை, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் இங்கு அதிகம் நிகழ்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க