வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (27/04/2018)

கடைசி தொடர்பு:22:30 (27/04/2018)

'மூன்றாவது அணி அமைக்கும் பணியில் தீவிரம்!’ - கருணாநிதியைச் சந்திக்கும் சந்திரசேகர ராவ்

மத்தியில் ஆளும் அரசுகளின் திறமையின்மையால் தண்ணீருக்காகப் போர் நடந்துகொண்டிருக்கிறது எனத் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 

சந்திரசேகர ராவ்

Photo courtesy: ANI

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் 17 வது ஆண்டு கூட்டம் ஹைதராபாத் அருகேயுள்ள கோம்பள்ளி என்ற இடத்தில் இன்று நடைபெற்றது. கட் அவுட்கள், கொடிகள் என எங்கு பார்த்தாலும் பிங்க் நிறமாக மாநாடு காட்சியளித்தது. மாநாட்டின் இறுதியில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பா.ஜ.க, காங்கிரஸுக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்தார். அதில், ''70 ஆண்டுகளாகக் காங்கிரஸும் பா.ஜ.க-வும் இந்தியாவை ஆண்டுவருகின்றன. நாட்டுக்காக இவர்கள் என்ன செய்துள்ளார்கள்? இவர்களால் இந்தியா ஒவ்வொரு துறையிலும் பின்தங்கியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸும் பா.ஜ.க-வும் நாடகம் நடத்தி வருகின்றன. 

மத்தியில் ஆளும் அரசுகளின் திறமையின்மையால்தான் மாநிலங்களுக்கிடையில் தண்ணீருக்காகப் போர் நடந்துகொண்டிருக்கிறது. காவிரி பிரச்னையைத் தற்போது எழுப்ப வேண்டிய காரணம் என்ன இருக்கிறது. தண்ணீர் அனைவருக்குமானது. ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு ஏக்கருக்கும் நீர் வழங்கப்பட வேண்டும். பா.ஜ.க, காங்கிரஸ் தலைவர்களை எச்சரிக்கிறேன். விரைவில் மத்தியில் கூட்டாட்சி அமைக்கப்படும். அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். அதனொருபகுதியாக வரும் 29-ம் தேதி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கவுள்ளேன். இனிவரும் மாதங்களில் புதிய ஆட்சியை இந்த நாடு சந்திக்கும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க