'இந்திய பாரம்பர்யத்துடன் மெனுகார்டு’ - மோடிக்கு சிறப்பு விருந்து கொடுத்த சீன அதிபர் | Wuhan menu card designed with Indian touch for PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (28/04/2018)

கடைசி தொடர்பு:19:30 (28/04/2018)

'இந்திய பாரம்பர்யத்துடன் மெனுகார்டு’ - மோடிக்கு சிறப்பு விருந்து கொடுத்த சீன அதிபர்

அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக பிரதமர் மோடி, சீனா சென்றிருந்தார்.

இந்திய - சீன எல்லையான டோக்லாம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவிவரும் சமீபகால பதற்றங்களுக்கு மத்தியில், இருவரின் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. போட் ரைடிங், மியூசியத்தைச் சுற்றிப்பார்ப்பது, தலைவர்களுடன் நடைப்பயணம் செல்வது எனத் தனது வழக்கமான 'டச்' உடன்  சீனாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், அங்கு நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டிலும் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில், பயணத்துக்கிடையே பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் விருந்து அளித்துக் கௌரவித்துள்ளார். பிரதமர் மோடி, தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்படும் முன்பாக, அவருக்கு இந்த விருந்தை ஜி ஜின்பிங் அளித்தார். 

தனிப்பட்ட முறையில் இந்த விருந்துக்கு ஜி ஜின்பிங் ஏற்பாடுசெய்திருந்தார். இந்த விருந்தின் 'மெனு கார்டு' தான் இதில் ஹைலைட்டே. பச்சை, தங்க நிறத்தில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில் உருவம் பொறிக்கப்பட்டவாறு மெனு கார்டு தயாரிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியைக் கௌரவப்படுத்தும் விதமாக, இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் ஜி ஜின்பிங் செய்திருந்தார். மெனு கார்டு உள்ளிட்டவைகள் தயாரிப்பில் பிரத்யேகக் கவனம் செலுத்தியதாக சீன அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மதியம் மோடி, இந்தியா புறப்பட்டார். முன்னதாக, 'உங்களின் சீனப் பயணத்தில் எந்த நோக்கமும் இல்லை' என மோடியை ராகுல்காந்தி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க