'ரிங்கா ரிங்கா ரோசஸ்’ - வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸின் குட்டிச் செல்லங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் குழந்தைகள் ஒன்றாக விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் ட்ரெண்டாகி வருகிறது.

ஷிவா

இந்தியாவைப் பொறுத்தவரை இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பது தற்போது நடந்துகொண்டிருக்கும் 11-வது ஐபிஎல் போட்டிகள் தான். இதில் அனைத்து அணிகளும் கோப்பைக்காக மிகவும் தீவிரமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. சென்னை அணி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் மீண்டும் களமிறங்கியுள்ளதால் இந்த ஆண்டின் ஐபிஎல் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை அணி ஆடும் ஒவ்வொரு போட்டியும் பரபரப்புக்குச் சற்றும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது.
சி.எஸ்.கே-வின் ஆட்டத்தினால் எங்களின் பிபி அதிகரிப்பதாக ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பரவலாகப் பேசி வருகின்றனர்.

இந்த பரபரப்புக்கு நடுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது மகள் ஷிவா-வின் கியூட் ஆன புகைப்படங்கள், வீடியோக்கள் என அவ்வப்போது தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுவருகிறார். இந்தப் பதிவு ரசிகர்களுக்கு மிகவும் குஷியை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள தோனி, ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் மகள்களான ஷிவா, ஹினயா, க்ரேஸியா ஆகிய மூன்று குழந்தைகளும் ‘ரிங்கா ரிங்கா ரோஸஸ்’ விளையாடும் வீடியோவை சுரேஷ் ரெய்னா தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு அனைவரும் wow, Sweet, cute CSK team என்று கமென்ட் செய்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!