இந்தியா குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சிப் புகைப்படம்!

இந்தியாவின் பருவநிலை மாற்றத்தை நாசா படம்பிடித்து வெளியிட்டுள்ளது. அதில் இருக்கும் சிவப்பு நிறப் புள்ளிகள், காட்டுத் தீயாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இந்தியாவின் பருவநிலை மாற்றத்தைப் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களில், கடந்த பத்து நாள்களில் மட்டும் வயல்வெளிகள், காடுகள் தீப்பிடித்துள்ளதாகக் கூறியுள்ளது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தென் இந்தியாவின் சில பகுதிகளில் சிவப்பு நிறப் புள்ளிகள்போல காணப்படுகின்றன. இந்தப் புள்ளிகள், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மாறுபாட்டைக் குறிப்பதாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. மேலும், அதிக வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயாகக்கூட இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த காட்டுத் தீயினால் ஏற்படும் கரும் புகைகள் மிகவும் ஆபத்தானது என்றும், இது மிகப்பெரிய இயற்கைப் பேரிடருக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!