' எப்படி இருக்கீங்க?' - லாலுவை நலம் விசாரித்த ராகுல்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் லாலுபிரசாத் யாதவை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

ராகுல் காந்தி

ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவருகிறார். மாட்டுத்தீவன ஊழலின் நான்காவது வழக்கான தும்கா கருவூல வழக்கிலும் அவர் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், லாலுவுக்கு பதினான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அறுபது லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த நான்கு வழக்குகளையும் சேர்த்து, 27 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலுவுக்கு, கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மார்ச் 29-ம் தேதி அன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு மாரடைப்பு மற்றும் சிறுநீரகத்துடன் தொடர்புடைய பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், லாலுபிரசாத் யாதவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, லாலு பிரசாத் யாதவின் உடல்நலம்குறித்து ராகுல்காந்தி விசாரித்ததாகவும் கர்நாடக சட்டசபைத் தேர்தல்குறித்து ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!