பரபரப்பாக நடைபெறும் கர்நாடகத் தேர்தல் பிரசாரம் - நிம்மதியாகத் தூங்கிய சித்தராமையா!

கர்நாடக சட்டசபைத் தேர்தலையொட்டி அங்கு நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் சித்தராமையா தூங்கிவழியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சித்தராமையா

கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடக அரசியல் களமே மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது . தேர்தலுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் அங்கு இரு பெரும் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தங்கள் பலத்தை நிரூபிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான பி.ஜே.பி காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கவும் தீவிரமாகப் போராடி வருகிறது.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், கர்நாடகத் தேர்தல் இந்திய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அங்கு பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்பதுக்காக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கடந்த ஒரு மாதமாகப் பெங்களூரில் தங்கியிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியும் பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடியும் பிரசாரம் மேற்கொண்டனர்.

இவ்வளவு பரபரப்பாக இருக்கும் கர்நாடகா தேர்தலில், நேற்று குல்பர்காவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஒருவர் மேடையில் மைக்கின் முன் பேசி பிரசாரம் செய்து வருகிறார். அந்தச் சத்தத்திலும் அவ்வளவு மக்கள் முன்னிலையிலும்  முதல்வர் சித்தராமையா மேடையிலேயே தூங்கிவழிந்துள்ளார். அவர் தூங்குவதை அருகில் இருந்த சிலர் குறிப்பிட்டு சொன்னபோதும் அதை மறைக்கும் விதமாகக் கன்னத்தில் கை வைத்து சமாளிப்பதுபோல் மீண்டும் தூங்கினார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!