'விமானத்தில் இணைய வசதி, செல்போன் பேச அனுமதி!’ - தொலைத்தொடர்புத்துறை ஆணையம் ஒப்புதல்

விமான பயணத்தின்போது வைஃபை மற்றும் செல்போன் பயன்படுத்த அனுமதியளிக்கும் கோரிக்கைக்கு தொலைத்தொடர்புத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ''இந்திய வான்வெளிகளில் பறக்கும் விமானங்களில் வைஃபை மற்றும் செல்போனில் பேசுவதை அனுமதிக்கும் முடிவுக்கு தொலைத்தொடர்புத் துறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், விமானப் பயணிகள் மகிழ்ச்சி அடைவர். இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமானப் பயணிகளின் பயணம் மகிழ்ச்சிகரமாகவும் எந்தவித இடையூறு இன்றியும் அமைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது’’ என்றார். அதேநேரம், இந்தச் சேவையை வழங்குவதற்கான கட்டணத்தை நிர்ணயிப்பது உள்ளிட்ட விவகாரங்களைக் குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்விட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தின் இணையம் மற்றும் செல்போன் பேசுவது உள்ளிட்ட வசதிகள் தொடர்பாகக் கொள்கைகள் வகுக்க பரிந்துரைகளை அளிக்கும்படி இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம், மத்திய தொலைத்தொடர்புத்துறை கடந்த ஆண்டில் கேட்டிருந்தது.      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!