'குறிப்புகள் இல்லாமல் 15 நிமிடங்கள் பேசத் தயாரா?’ - ராகுலுக்குச் சாவல்விட்ட மோடி

கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சவால் விடுத்திருக்கிறார். கர்நாடகாவில் வீசுவது பா.ஜ.க, மோடியின் அலை இல்லை, பா.ஜ.க-வின் புயல் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

மோடி


கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் 10 நாள்களில் 60 தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சாமரஜனகார மாவட்டத்தில் உள்ள சாந்தமெராஹள்ளியில் நடந்த பா.ஜ.க பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடிபேசினார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், '' நான் இங்கு வந்ததற்கு முன்பு, கர்நாடகாவில் பா.ஜ.கவுக்கு ஒரு 'அலை' உள்ளது என்று கூறப்பட்டது. கர்நாடகாவில் வீசுவது பி.ஜே.பி அலை இல்லை, பி.ஜே.பியின் புயல். கர்நாடக மக்களுக்கு எடியூரப்பா மீது நம்பிக்கை உள்ளது. அவர் இந்த மாநிலத்தின் அடுத்த முதல்வர் ஆவார். கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த வளர்ச்சி திட்டங்கள் பற்றி 15 நிமிடங்கள் பேப்பர் இல்லாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசத் தயாரா?. பிரதமர் மோடி சவால் விடுத்தார். இந்தக் கூட்டத்தில் கார்வார், உடுப்பி மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!