'தெரியாத நபர்களுடன் சாட் செய்யாதீர்கள்' - மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் என்.சி.இ.ஆர்.டி!

'அறிமுகம் இல்லாத நபர்களுடன் சாட் செய்ய வேண்டாம்' என மாணவர்களுக்கு என்.சி.இ.ஆர்.டி அறிவுரை வழங்கியுள்ளது. 

வளர்ந்துவரும் இணையதள உலகில், சைபர் பாதுகாப்பு மற்றும் இணையதளப் பயன்பாடுகுறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, தேசிய கல்வி மற்றும் பயிற்சிக் கழகம் (என்.சி.இ.ஆர்.டி) அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து என்.சி.இ.ஆர்.டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,  ''மாணவர்கள், தேவையில்லாத அல்லது அறிமுகம் இல்லாத நபர்களுடன் சாட் செய்வதோ, இ-மெயில் மூலம் விவாதிக்கவோ வேண்டாம். அவ்வாறு விவாதிக்க வேண்டுமானால், உங்கள் பெயர் அல்லாமல் வேறு பெயர் மூலம் விவாதியுங்கள். 

மேலும், அடுத்தவர்கள் முன் ஆன்லைன் சாட் செய்யக் கூடாது. ஆசிரியர்கள், மாணவர்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள், தங்கள் மின்னஞ்சலில் உண்மை விவரங்களைப் பதிய வேண்டாம். மெயில் விவாதங்களை உடனடியாகத் தணிக்கைக்கு உட்படுத்திக் கண்காணிக்க வேண்டும். அடுத்தவர்களைத் தங்கள் பென் டிரைவைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். கம்ப்யூட்டர் மானிட்டரில் தேவையில்லாத ஐகான்களை அகற்ற வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!