வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (02/05/2018)

கடைசி தொடர்பு:08:22 (02/05/2018)

டெல்லியில் ராகுல் காந்தி, திருமாவளவன் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்திய தேச பாதுகாப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திருமாவாளவன் பேசியதாவது, “ இந்திய தேச பாதுகாப்பு மாநாட்டுக்கு ராகுல் காந்தி கலந்துகொள்வதாகத் தெரிவித்தார். அதன் தேதி, பின்னர் அறிவிக்கப்படும். மதச் சார்பற்ற சக்திகள் ஒருங்கிணையவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைக் கூறினேன். மேலும், பட்டியலின மக்களின் வன்கொடுமைச் சட்டத்துக்கு காங்கிரஸ் கொடுத்த அழுத்தத்துக்கு நன்றி தெரிவித்தேன்” என்று கூறினார்.  

இதற்கு முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியைச் சந்தித்தார். அப்போது, பா.ஜ.க அல்லாத மதச் சார்பற்ற அனைத்துக் கட்சிகளையும் ஒருகிணைக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க, காங்கிரஸ் என இரண்டு கட்சிகள் மீதும் வெறுப்பு உள்ளது.  பா.ஜ.க-வை தனிமைப்படுத்தி, மற்ற தோழமைக் கட்சிகள் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இது, தேர்தல் நேரத்தில் சாத்தியமாகும் என நம்புகிறேன். தமிழகத்தில் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க அரசு மத்திய பா.ஜ.க-வுடன் இணக்கமாக இருப்பது, தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம்” எனத் தெரிவித்தார்.