பராமரிப்புப் பணிக்காக 6 மணி நேரத்துக்கு முடக்கப்படும் ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்!

புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்காகவும் பராமரிப்புக் காரணங்களுக்காகவும் ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் செல்போன் செயலி போன்றவை இன்றிரவு 10.45 மணி முதல் நாளை (3.5.2018) அதிகாலை 5 மணி வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐஆர்சிடிசி இணையதளம்

நாடு முழுவதும் ரயில் டிக்கெட்டுகள், தத்கால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரயில்வே துறையால் www.irctc.co.in என்ற இணையதளமும், அதனுடன் தொடர்புடைய செல்போன் செயலியும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. டிக்கெட் முன்பதி செய்வதுடன், பயணத்தின்போது உணவு வகைகளை ஆர்டர் செய்வது, விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எனப் பல்வேறு வகையான வசதிகள் அந்த இணையதளம் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் செல்போன் செயலி மற்றும் அது தொடர்பான இணையதளங்கள் இன்று (2.5.2018) இரவு 10.45 மணி முதல் நாளை (3.5.2018) அதிகாலை 5 மணி வரை பராமரிப்பு காரணங்களாகச் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பயணிகள் முன்பதிவு செய்வது, 139 உதவி எண் மற்றும் கால் சென்டர் உதவி மையம் போன்ற வசதிகளைப் பயணிகள் பயன்படுத்த முடியாது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!