பத்திரிகையாளர் கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை! சிபிஐ நீதிமன்றம் அதிரடி | Chotta Rajan gets life term in Journalist's murder case

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (02/05/2018)

கடைசி தொடர்பு:21:00 (02/05/2018)

பத்திரிகையாளர் கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை! சிபிஐ நீதிமன்றம் அதிரடி

பத்திரிகையாளர் ஜே டே கொல்லப்பட்ட வழக்கில் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி சோட்டா ராஜன் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பத்திரிகையாளர் ஜே டே கொல்லப்பட்ட வழக்கில் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி சோட்டா ராஜன் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சோட்டா ராஜன்

மும்பையின் நிழலுக தாதாக்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக பத்திரிகைகளில் எழுதிவந்த ஜோதிர்மே டே என்ற பத்திரிகையாளர் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உரிய பாதுகாப்பு அளிக்க வலுயுறுத்தி பத்திரிகையாளர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் என களமிறங்கினர். மும்பையில் நிழலுக தாதாவான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி என கருதப்பட்ட சோட்டா ராஜனின் கட்டளைப்படியே பத்திரிகையாளர் ஜே டே கொல்லப்பட்டார் என பரவலாகப் பேசப்பட்டது. இதையடுத்து, கடந்த 2015-ல் இந்தோனேசிய விமான நிலையத்தில் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரித்து வந்த இந்த வழக்கில் சோட்டா ராஜன் உள்பட 9-க்கும் மேற்பட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் சோட்டா ராஜன் உள்பட 9 பேர் குற்றவாளிகள் என இன்று காலையில் அறிவிக்கப்பட்டது. அதேபோல், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பத்திரிகையாளர் ஜிக்னா வோரா உள்ளிட்ட 2 பேரின் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில், குற்றவாளிகளுக்கான தண்டணையை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிற்பகலில் அறிவித்தது. இதில், சோட்டாராஜன் உள்ளிட்ட 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம், அவர்களுக்கு ரூ.26 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.