வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (02/05/2018)

கடைசி தொடர்பு:18:55 (02/05/2018)

நல்ல துவக்கத்துக்குப் பின் தொய்வில் முடிந்த சந்தை 

ஒரு நல்ல பாசிட்டிவான துவக்கத்திற்குப் பின் சரிவைக்கண்ட இந்திய பங்குச்சந்தை மதியத்திற்குப் பின் மீண்டும் முன்னேறினாலும், போதுமான சப்போர்ட் கிடைக்காததால் முந்தைய வர்த்தக தின முடிவிலிருந்து பெரிய மாற்றமின்றி இன்று முடிந்தது.

மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 200 புள்ளிகள் உயர்ந்திருந்தாலும், சந்தை முடியும்போது 16.06 புள்ளிகள் அல்லது 0.05 சதவிகிதம் மட்டுமே லாபம் ஈட்டி 35,176.42 என முடிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 21.30 புள்ளிகள் அதாவது 0.2 சதவிகிதம் சரிந்து 10,718.05-ல் முடிவுற்றது.

சர்வதேச சந்தைகளில் ஒரு தெளிவான முன்னேற்றம் இருந்தாலும், இந்திய தொழிற்சாலை உற்பத்தி பற்றிய அறிக்கை சிறப்பாக இல்லாததால் இன்று சந்தையில் ஒரு நிச்சயமற்ற நிலை காணப்பட்டது.

இன்று அமெரிக்க பெடரல் ரிசர்வின் மானிட்டரி பாலிசி அறிக்கை வெளிவர இருப்பதால் முதலீட்டாளர்கள் சற்று ஜாக்கிரதையாக செயல்பட்டதுதான் பங்குகள் உயர் நிலையில் சப்போர்ட் இழந்ததன் காரணம் எனக் கூறலாம். 

கடந்த ஏப்ரல் மாதத்தில்   ட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை சிறப்பாக இருந்ததாக வெளியான அறிக்கைகள் காரணமாக இன்று சந்தை துவங்கியவுடன் ஒரு நல்ல முன்னேற்றம் இருந்தது.

இன்று விலை உயர்ந்த பங்குகள் :

கோடக் பேங்க் 4%
ஜீ டெலி 2%
ஐ.டி.சி 1.8%
ஆக்ஸிஸ் பேங்க் 1.5%
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.4%
எச்.டி.எப்.சி பேங்க் 1.3%
ஹௌசிங் டெவெலப்மென்ட் பைனான்ஸ் 1.3%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.2%

விலை இறங்கிய பங்குகள் :

வேதாந்தா 5%
எச்.சி. எல். டெக்னாலஜிஸ் 4.5%
ஹின்டால்க்கோ 3.5%
டாடா ஸ்டீல் 3.4%
ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஹீரோ ஹோண்டா மோட்டோகார்ப், யெஸ் பேங்க் மற்றும் எய்ச்சேர் மோட்டார்ஸ் 2 முதல் 2.5 சதவிகிதம் குறைந்தன.