`தேசிய விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!’ - 60-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் புறக்கணிப்பு

இன்று டெல்லியில் நடைபெறும் தேசிய விருது விழாவை 60-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

தேசிய விருது

திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தேசிய விருது வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தும். இந்த விருதுகளை வெல்லும் கலைஞர்களுக்கு, குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குவார். இந்தாண்டு தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெறவுள்ளது. ஆனால், குடியரசுத் தலைவர் சிறந்த படம், சிறந்த இசை, தாதா சாகேப் பால்கே முதலிய விருதுகள் உட்பட 11 விருது பெறுபவர்களுக்கு மட்டுமே நேரடியாக விருதுகளை வழங்குவார் எனவும், மீதம் உள்ளவர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி விருதுகளை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. 

இது விருதுகளை வென்ற மற்ற கலைஞர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் சுமார் 60 கலைஞர்கள் இன்று நடக்கும் விருது விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். குடியரசுத் தலைவர் மரபை மீறி கலைஞர்களை அவமதித்துவிட்டார் எனக் குற்றம்சாட்டுகின்றனர் கலைஞர்கள். இது குறித்து, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மராட்டிய இயக்குநர் பிரகாஷ், ‘இது எங்களை அவமதிக்கும் செயல். பல கலைஞர்கள் இந்த விழாவைப் புறக்கணிப்பார்கள்’ என்றார். தமிழ் மொழியில் சிறந்த படமாகத் தேர்தெடுக்கப்பட்ட டூலெட் படத்தின் இயக்குநர் செழியன் உட்பட பலர் இந்த விழாவைப் புறக்கணிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விருது விழா இயக்குநருக்கு திரைத்துறை கலைஞர்கள் சிலர் கடிதம் எழுதியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!