தொடங்கியது நீட் தேர்வு..! நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதுகின்றனர் | NEET exam started

வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (06/05/2018)

கடைசி தொடர்பு:10:04 (06/05/2018)

தொடங்கியது நீட் தேர்வு..! நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதுகின்றனர்

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். 

நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 10 மணிக்கு தொடங்கியுள்ள இந்தத் தேர்வு 1 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் 13 லட்ச மாணவ, மாணவிகள் எழுதுகின்றன. தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்களில் 170 தேர்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதுவருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 12 மையங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். மாணவ, மாணவிகள் ஆடைகள் அணிவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாணவிகள் துப்பாட்டா அணியக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.