நீட் தேர்வுக்காக சுவர் ஏறிக் குதித்த மாணவிகள் - வெளியில் தள்ளிய அதிகாரிகள்.!

பெங்களூருவில் இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்ததால் நீட் தேர்வு எழுத அனுமதிக்காத நிலையில், மாணவிகள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று தேர்வு எழுத முயற்சி செய்தனர். 

நீட்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் கூட மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால் தேர்வு மையத்துக்குக் குறித்த நேரத்தில் செல்ல முடியுமா என்ற பயத்திலேயே சென்றனர்.

இந்நிலையில், கர்நாடகா உள் மாவட்டங்களில் இருந்து பெங்களூருவுக்கு தேர்வு எழுத இரண்டு மாணவிகள் சென்றுள்ளனர். அவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தை விட இரண்டு நிமிடங்கள் தாமதமாக சென்றதால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பெற்றோர்கள் எவ்வளவோ கூறியும் அதிகாரிகள் தேர்வு மையத்தினுள் அனுமதிக்க மறுத்து விட்டனர். அதன் பின் அந்த இரண்டு மாணவிகளும் தங்களின் பெற்றோர்களின் உதவியுடன் தேர்வு மையத்தின் சுவரை தாண்டிக் குதித்து உள்ளே சென்றுள்ளனர். இதைக் கவனித்த அதிகாரிகள் அந்த மாணவிகளை வேகமாக அழைத்து வந்து வெளியே  விட்டனர்.  நீண்ட தொலைவில் இருந்த வந்த  மாணவிகள் மிகவும் சோகத்தோடு வீடு திரும்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!