வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (07/05/2018)

கடைசி தொடர்பு:11:36 (07/05/2018)

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்

'தமிழகத்துக்கு, தற்போது தரவேண்டிய 4 டி.எம்.சி தண்ணீரை கொடுக்க முடியாது' என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த 3-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

'மே மாதத்துக்குள் கர்நாடக அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்' என்று உத்தரவிட்டு, மே 8-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். நாளை, இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது. அந்த அறிக்கையில், 'கடந்த 4 மாதங்களில் தமிழகத்துக்கு 14 டி.எம்.சி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது, போதிய மழையில்லாததால் அணைகளில் நீர் இல்லை. எனவே, தமிழகத்துக்கு 4 டி.எம்.சி நீர் கொடுக்க இயலாது. மழையின்மை காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற முடியவில்லை' என்று குறிப்பிட்டுள்ளது.