கமல்ஹாசன் குரல் கொடுத்த அமோலி என்ற ஆவணப்படம் இன்று வெளியாகிறது!

`அமோலி- விலைமதிப்பில்லா' என்ற ஆவணப்படம் இணையதளத்தில் இன்று வெளியாகிறது.

அமோலி

பெண் குழந்தைகள் கடத்தப்படுவதையும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களையும் மையப்படுத்தி ஜாஸ்மின் கௌர் ராய் மற்றும் அவினாஷ் ராய் ஆகிய இருவரும் இந்திய அளவில் ஒரு ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். இதற்கு தமிழில் கமல்ஹாசன், ஆங்கிலத்தில் வித்யா பாலன், பெங்காலியில் ஜிஷு செங்குப்தா, கன்னடத்தில் புனித் ராஜ்குமார், இந்தியில் ராஜ்குமார் ராவும் இந்த ஆவணப்படத்தின் டீசருக்கு குரல் கொடுத்துள்ளனர். 

இந்தி மொழியில் உருவாகியிருக்கும் இந்த ஆவணப்படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, மராத்தி, கன்னடா என மொத்தம் ஏழு மொழிகளில் தயாராகி இருக்கிறது. இந்தப் படம், யூடியூபிலும், ஃபேஸ்புக்கிலும் இன்று வெளியாக உள்ளது. மோல் (பணம்), மாயா (மருட்சி), மந்தன் (உள் முரண்பாடு), முக்தி (விடுதலை) என நான்கு பகுதிகளைப் பேசும் படமாக இருக்கும் என்று இயக்குநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு முன் இவர்கள் இயக்கிய ஆவணப்படம் தேசிய விருது பெற்றுள்ளது.  

அமோலி

''சமுதாயத்தில் தற்பொழுது பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் அவலங்களை எடுத்துரைக்கும் விதமாக மக்களுக்கு விழிப்பு உணர்வூட்டவே இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். அதுமட்டுமின்றி காவல்துறையும் அரசாங்கமும் இந்தப் பிரச்னையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் எங்களது நோக்கம்'' என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!