Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

உலகச் சந்தைகள்

அமெரிக்க சந்தைக் குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,672.63 (+9.21) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 24,357.32 (+94.81) என்ற அளவிலும்,  திங்களன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது.  தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,314.50 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 76.17 டாலர்  என்ற அளவிலும் இருந்தது.    

டாலரின் மதிப்பு ரூபாயில்

திங்களன்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.67.1060 என்ற அளவில் இருந்தது.

நிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்

இன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு?

திங்களன்று நல்லதொரு ஏற்றத்துடன் நிஃப்டி முடிவடைந்திருந்தது. காலாண்டு முடிவுகள் மற்றும் செய்திகள் போன்றவற்றின்மீது தொடர்ந்து கவனம் வைத்து டிரேடிங் செய்யவேண்டியிருக்கும். டெக்னிக்கல்கள் மீண்டும் பொய்யாகிப்போய்விடும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஹை ரிஸ்க் எடுக்கக்கூடிய தகுதிகொண்ட டிரேடர்கள்கூட மிகவும் சிறிய எண்ணிக்கையில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே வியாபாரம் செய்யலாம்.  ஏற்றம் தொடர்ந்து, அதேசமயம் நடக்கின்ற வால்யூம் சராசரி அளவைவிட குறைய ஆரம்பித்தால், வியாபாரத்தை நிறுத்திக்கொளவதே நல்லதொரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். கடைசி அரை மணி நேரத்துக்கு முன்னரே வியாபாரத்தை முடித்துக்கொள்வது நல்லது.  நல்லதொரு எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய டிரேடிங் தினம் இது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்?

07-05-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை  என்று பார்த்தால், 3.841.79 கோடி ரூபாய்க்கு வாங்கியும்,  4,477.03 கோடி ரூபாய்  அளவிற்கு விற்றும் நிகர அளவாக 635.24 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.

உள்நாட்டு இன்ஸ்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள் (டிஐஐ) என்ன செய்தார்கள்?

07-05-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால்,  3,352.64 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 2,315.41 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 1,037.23  கோடி ரூபாய்க்கு  வாங்கியிருந்தனர்.

டெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே!

குறிப்பிட்ட சில பங்குகளில் 07-05-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம்:.

ஓப்பன் இன்ட்ரஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):

FEDERALBNK, ICICIBANK, NATIONALUM, IDFCBANK, IFCI, SOUTHBANK, JSWSTEEL, HDFCBANK, IDEA, EXIDEIND, UJJIVAN, SUZLON, IDFC, YESBANK, PFC, SUPHARMA, APOLLOTYRE.

 ஓப்பன் இன்ட்ரஸ்ட் குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):

RPOWER, SAIL, PNB, VEDL, BALRAMCHIN, SYINDIBANK, TATAMOTOR, JISLJALEQS, WIPRO, HINDALCO, RELIANCE, IOC, BANKBARODA, MANAPPURAM, RELINFRA.

உங்களுக்குத் தெரியுமா - இந்த ஷேர்களில் 08-05-18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம் செய்யக் கூடாது என்பது!

எப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தால், புதிய வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:

BALRAMCHIN, IRB, JETAIRWAYS, JUSTDIAL, WOCKPHARMA.

இன்றைய போர்டு மீட்டிங்குகள் 

இன்று  போர்டு மீட்டிங்  நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்):
ABB, ABCAPITAL, BLUEDART, DENORA, AUTOAXLES, GODREJCP, GTLINFRA, FORTUNEFIN, HINDCOMPOS, HEG, JUBLFOOD, KAJARIACER, INDNIPPON, PALASHSECU, PAPERPROD, MHRIL, PHOENIXLTD, NEXTMEDIA, NRC, SILINV, SINTEX, SKFINDIA, STINDIA, SPARC, SADBHIN, SANOFI, WHIRLPOOL, VESUVIUS.
*****
பொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html  எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்:  INH200001384)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement