வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (08/05/2018)

கடைசி தொடர்பு:14:03 (08/05/2018)

‘கடவுள்களுக்கும் வியர்க்கும்’ - சுவாமி சிலைகளுக்கு ஏ.சி வைத்த உ.பி கோயில் நிர்வாகம்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், `சுவாமி சிலைக்கு வியர்க்கும் என்பதால் ஏ.சி பொருத்தியுள்ளோம்' என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசம்

வடமாநிலங்களில் ஒரு புறம் மழை, புழுதிப் புயல் என வீசினாலும், மற்றொரு புறம் கடுமையான வெயில் மக்களை வாட்டிவதைத்து வருகிறது. கோடை வெயிலினால் மக்கள் பெரும் அவதி அடைந்துவருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு கோயிலில், சுவாமி சிலைகளுக்கு ஏ.சி மற்றும் குளிரூட்டும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இதுகுறித்துப் பேசிய கான்பூர் கோயில் குருக்கள் ஒருவர், 'இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எங்களை அணுகி,‘கடவுள்களும் நம்மைப் போன்றே சூடாக உணர்கிறார்கள். அதனால், அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று கூறினர். அதனாலேயே, இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.