பிரபலங்களின் குதூகலம்... களைகட்டிய இஷா அம்பானி நிச்சயதார்த்தம்!

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பிரபல நிறுவனமான பிரமல் குரூப்ஸின் உரிமையாளர் அஜய் பிரமலின் மகன் ஆனந்த் பிரமலுக்கும் மும்பையில் நிச்சயார்த்தம் நடந்தது.

பிரபலங்களின் குதூகலம்... களைகட்டிய இஷா அம்பானி நிச்சயதார்த்தம்!

அம்பானி

PC: instagram.com

மும்பை நகரம், இந்த ஆண்டில் பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளில் திளைத்திருக்கப்போகிறது என்றே கூறலாம். நேற்று பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவுடன் கோலாகலமாக நடந்து முடிந்தது. அடுத்து, முகேஷ் அம்பானியின் வீட்டுத் திருமணங்கள்தாம், டாக் அப் தி மும்பை டவுன்!

ஏற்கெனவே, முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம், பிரபல வைரத் தொழிலதிபரான ரசூல் மேத்தாவின் மகள் ஷோல்கா மேத்தாவுடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள  நிலையில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பிரபல நிறுவனமான பிரமல் குரூப்ஸின் உரிமையாளர் அஜய் பிரமலின் மகன் ஆனந்த் பிரமலுக்கும் கடந்த திங்கள்கிழமை, மும்பையிலுள்ள மஹாபலேஷ்வர் கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணமும் டிசம்பர் மாதமே நடைபெறவுள்ளது. இந்த நிச்சயார்த்த நிகழ்ச்சியில், நடிகர் ஷாரூக்கான், கிரிக்கெட் வீரர் சச்சின்  டெண்டுல்கர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நடிகர்கள் அமீர்கான், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல மும்பை பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவ் விழாவில், அனில் அம்பானி குடும்பத்துடன் கலந்துகொண்டார். தொழில்ரீதியாக, முகேஷ் அம்பானியுடன் நீண்ட நாள்கள் கருத்து வேறுபாட்டிலிருந்த அனில் அம்பானி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிட்டதக்கது.

அம்பானி

PC: instagram.com

இஷா அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆடிய டான்ஸ் ஸ்டெப்ஸ் சமூகவலைதளங்களில் வைரலானது. நீதா அம்பானியும் இஷா அம்பானியும்,  ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்திலிருந்து `நவ்ராய் மஜ்ஹி’ (Navrai Majhi) பாடலுக்கு நடனமாடினர் .  

தன் நிச்சயதார்த்த உடையாக,வெளிர் பிங்க் நிறத்தில், தங்க நிற வேலைப்பாடுகள் நிறைந்த லெஹங்காவை அணிந்திருந்தார் இஷா அம்பானி. இதனை வடிவமைத்தது, பிரபல ஆடை வடிவமைப்பாளர் சம்பியாசாஷி முகர்ஜி. இந்த லெஹங்காவுக்குப் பொருத்தமாக,  வைர  நெக்லஸ் மற்றும் கம்மல் அணிந்திருந்தார்.   

இஷா அம்பானி
PC: instagram.com

இஷாவை மணக்கவிருக்கும் ஆனந்த் பிரமல், தற்போது பிரமல் குரூப்ஸின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவர் அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் படித்துவிட்டு, ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் `பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்' (Business Administration) படிப்பை முடித்திருக்கிறார். நிச்சயதார்த்ததுக்குமுன், இஷா அம்பானிக்கு ஆனந்த் பிரமல் புரொபோஸ் செய்த புகைப்படம், சமூகவலைதளங்களில் பிரபலமானது. இவருக்கு நந்தினி பிரமல் என்ற சகோதரி இருக்கிறார். 

இஷா அம்பானி

PC: instagram.com

அம்பானியும், பிரமலும் நீண்ட நாள்கள் குடும்ப நண்பர்களாக இருப்பவர்கள். முகேஷ் அம்பானி, ஆனந்த பிரமலுக்குத் தொழில்ரீதியாக குருவாக இருந்திருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டு, ஆனந்த் பிரமல், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கலாமா அல்லது தொழிலதிபர் ஆகலாமா என்ற குழப்பத்தில் இருக்க, அதற்கு முகேஷ் அம்பானி ``ஒரு தொழிலதிபராக இருப்பது கிரிக்கெட் விளையாடுவது போன்றது; அதுவே ஓர் ஆலோசகராக இருப்பது, அந்த கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக இருப்பது போன்றது", என்று அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்துதான், ஆனந்த் தன் குடும்பத் தொழிலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த இரு குடும்பங்களும் தனிப்பட்ட முறையில் இணையவிருக்கும் நிலையில், தொழில்ரீதியாகவும் பலமாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!